flipkart

Friday, 25 July 2014

ஒரு ட்ரைவை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க...!


          இன்றக்கு நாம் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்அறிந்திருக்கலாம். போல்டர்களைமறைத்துவைப்பதுபோன்றுகணினியிலுள்டரைவ்களையும்மறைத்துவைக்கமுடியும்.விண்டோஸில்இயங்குதளம்மூலம்கணினியிலுள்ளஎந்தஒருட்ரைவையும்அடுத்தபயனர்களின்பார்வையிலிருந்துமறைத்துவிடலாம். இதன் மூலம் உங்கள்   தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரேநேரத்தில்எல்லாட்ரைவ்களையுமோஅல்லதுகுறிப்பிட்டஒருட்ரைவைமாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ்ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது. முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக்-ஆன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பாக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் இந்த இடத்தை அணுகுங்கள். HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள். அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும். அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்


No comments:

Post a Comment