கம்ப்யூட்டர் மெதுவாக இயங்க காரணங்கள் – தீர்வுகள்
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்னைகளில்
முக்கியமானது கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதுதான். வந்த வேகத்தில் super
fast ஆக
இருந்த Computer, நாளாக.. நாளாக.. அப்படியே வேகம் குறைந்து, நத்தை மாதிரி மிக மெதுவாக
இயங்க ஆரம்பிக்கும். கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி Desktop அப்ளிகேஷன்கள் தெரிவதற்கு
ஐந்தாறு நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்ளும். ஒரு program கிளிக் செய்தால், அது செயல்பட ஆரம்பிப்பதற்கு
கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளும். இது எதனால் ஏற்படுகிறது? என்ன காரணம்? வாங்க தெரிஞ்சுக்குவோம்.
கம்ப்யூட்டர்
மெதுவாக இயங்க காரணங்கள்:
கம்ப்யூட்டர் மெதுவாக
இயங்குவதற்கு முழுமுதற் காரணம் சரியான மற்றும் முறையான பராமரிப்பு இன்மைதான். வேறு
சில காரணங்களாலும் கம்ப்யூட்டரானது மெதுவாக இயங்கும். கம்ப்யூட்டர் மெதுவாக
இயங்குவதற்கு காரண்ங்களும், தீர்வுகளும்
கீழே
கம்ப்யூட்டர் பராமரிப்பு (Computer Maintenance):
கம்ப்யூட்டரை முறையாக
பராமரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இணையத்தையும்
கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். இணையத்தைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள்
நிச்சயம் வைரஸ் பிரச்னைகளுக்கு உட்படும். எனவே முதலில் நல்லதொரு ஆண்ட்டி வைரஸ்
மென்பொருளை நிறுவுவது அவசியம்.
இலவச
மென்பொருட்கள் வேண்டாம்:
Don’t Use
FreeWare
இணையத்தில் எத்தனையோ இலவச
மென்பொருட்கள் உள்ளன. அவை அனைத்தும் நம்பகமாவை இல்லை. இலவசமாக தரவிறக்கம் செய்யும்
எந்த ஒருமூன்றாம்தர மென்பொருளும், அதனுடன் இணைந்த மால்வேர், ஸ்பைவேர், ஆட்வேர் என்ற நிரல்கள்
இல்லாமல் இருக்காது. முடிந்தளவு இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்து
பயன்படுத்துவதை தவிர்க்கலாம். Avoid free software to use on your
computer.
Hard Disk – ல் அதிக கோப்புகள்:
இப்படி நிறைய மென்பொருட்கள், மற்றும் கோப்புகள் ஹார்ட் டிஸ்க்கில் சேர்வதால் ஹார்ட்
டிஸ்கின் காலியிடம் குறைந்துவிடுதல். இதனால் கணனியின் செயல்பாட்டு வேகம்
குறைந்துவிடும். நீங்கள் Operating System பதிந்திருக்கும்
Drive- ல் கால் பகுதிய காலியாக இருக்கும்படி
பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக C டிரைவில்தான்
இயங்குதளத்தைப் பதிந்து வைத்திருப்பார்கள். கூடவே My
document, Download Folder ம் C ல்தான்
இருக்கும்.
இந்த இரண்டு போல்டர்களிலும்
சேமித்து உள்ள கோப்புகளை அடிக்கடி சோதனை செய்துகொள்ள வேண்டும். தற்காலிகமாக
சேமிக்கும் கோப்புகள், தரவிறக்கும்
மென்பொருட்கள் அனைத்துமே இந்த போல்டர்களில்தான் சேமிக்கப்பட்டிருக்கும்.
அவைகள் தேவையில்லை எனில், அல்லது அதிகமாக பயன்படுத்தாத கோப்புகளாக இருப்பின் அவற்றை
வேறொரு டிரைவிற்கு Cut செய்து
Paste செய்து மாற்றிக்கொள்வது நல்லது.
இதனால் அந்த போல்டரிகளில் அடைந்துள்ள இடமானது காலியாகும்.
நிறைய கம்ப்யூட்டர் பயனர்கள்
இணையத்தில் உள்ளபோது ஏதாவது ஒரு மென்பொருளையோ அல்லது கோப்புகளையோ டவுன்லோட் செய்து
சேமித்துவிட்டு, பிறகு
தேவையில்லாத போதும் அவற்றை அந்த போல்டரில் இருந்து நீக்கமலே வைத்திருப்பார்கள்.
இதனால் அங்கு கோப்புகள் நிறைந்து அதிகமான எடுத்துக்கொண்டிருக்கும்.
இந்தகாரணங்களாலேயே
கம்ப்யூட்டர் மிக மெதுவாக செயல்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டு, அக்கோப்புகளை வேறொரு டிரைவிற்கு மாற்றிவிடுதல் நல்ல பலனைக்
கொடுக்கும்.
Device களில் ஏற்படும் பிரச்னை
Device
களில்
ஏற்படும் பிரச்னைகளும் ஒரு காரணமாக அமையலாம். உங்களது கம்ப்யூட்டரோடு
இணைக்கப்பட்டுள்ள டிவைஸ்களில் ஏதேனும் பிரச்னை என்றாலும் உங்களுடைய கம்ப்யூட்டார்
மெதுவாக இயங்கும்.
·
இப்பிரச்னையைத்தீர்க்க My computer – ன் மீது ரைட் கிளிக் செய்து Manage
என்பதை
கிளிக் செய்து Device Manager என்பதை தேர்ந்தெடுங்கள்.
·
இப்பொழுது தோன்றும் Device பகுதியில் மஞ்சள்நிற
கேள்விக்குறிகளோடு ஏதேனும் டிவைஸ்கள் தோற்றமளித்தால் அவற்றின் மீது கிளிக் செய்து
ரீமூவ் செய்திடுங்கள்.
·
சிவுப்பு நிற பெருக்கல் குறிபோன்று தோன்றிட்டால் அதன் மீது
ரைட் கிளிக் செய்து Enable கொடுக்கவும்.
·
இந்த இரண்டு வழிமுறைகளையும் செய்துவிட்டு உங்கள் கணினியை Restart
கொடுக்கவும்.
·
இப்பொழுது அனைத்தும் சரியாகி இருக்கும்.
·
அவ்வாறு ரீஸ்டார்ட் கொடுத்தும் டிவைசின் மீது சிறிய
அம்புக்குறிப்போல தோற்றமளித்தால் அதில் பிரச்னை உள்ளது என்று பொருள். எனவே அதற்கான
புதிய Driver -ஐ இன்டர்நெட் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment